மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண தீர்மானம்.



இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்க்க பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையகத்தை அமைக்கவேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.24 hours

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த சனிக்கிழமை (08) பாராத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.24 hours

இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து 19 பக்கங்கள் அடங்கிய மகஜரை பிரதமர் மோடியிடம் கையளித்தார்.24 Hours

இதைத்தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக ஊடகமான தினத்தந்திக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.24 Hours

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, கடல்சார் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக பார்க்கவேண்டும். தென்னிந்தியாவையும், இலங்கையின் வடக்கு மாகாண பகுதியையும் பிரிக்கும் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பல்வேறு தனித்துவமிக்க கடல் வளங்கள் காணப்படுகின்றன.24 Hours

ஆனால் தற்போது அந்த பகுதியில் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பது இலங்கை வடக்கு மாகாண பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.24 Hours

போர் நடந்தபோது இலங்கையின் வடக்கு மாகாண பகுதியில் உள்ள தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.24 Hours

போர் நிறைவடைந்த பின்னர், ஒரு வருடத்துக்கு பிறகு தான் அவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்திய மீனவர்கள் இராட்சத படகுகள் மற்றும் ரெட்டை மடி வலைகள் மூலம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய மீன்களை சுருட்டிக்கொண்டு செல்வதோடு, வலைகளையும் சேதப்படுத்துவதாக இலங்கை தமிழ் மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.24 Hours

இதனால் இலங்கை தமிழ் மீனவர்கள் கோபம் அடைந்து, இந்திய மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் தாக்குகிறார்கள். மீனவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை இலங்கை கடற்படை தடுக்கிறது. வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மீன்வள திருத்த சட்டம் 2018 அமல்படுத்துவதற்கு முன்பு, 138 இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.24 Hours

இதற்கிடையே கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இந்திய கடலோர காவற்படை, இலங்கையை சேர்ந்த 34 மீன்பிடி படகுகளை பிடித்துள்ளது. அவற்றை விடுவிக்கவேண்டும்.24 Houts

மேலும், அதிக பணம் ஈட்டுவதற்காக மீனவர்கள் போதைப்பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை 2 நாடுகளும் இணைந்து தடுக்கவேண்டும். மீனவர்களின் படகுகளை பயன்படுத்தி கடல் எல்லையை பயங்கரவாதிகள் கடந்து செல்வது வளர்ந்து வரும் அச்சுறுத்தல் ஆகும்.24 Hours

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும். இந்த ஆணையத்தில் 2 நாடுகளை சேர்ந்த மீன்வளத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், இலங்கை வடக்கு மாகாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட 2 நாடுகளில் இருந்தும் தலா 7 உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும்.24 Hours

ஆழ்கடல் மீன்பிடி படகுகளை பெறுவதிலும், தேவையான நிதி மற்றும் தளபாட ஆதரவை வழங்குவதிலும், இந்திய மீனவர்களுக்கு மோடியின் உத்தரவாதம் உதவிகரமாக இருக்கும்.24 Hours

இதுதவிர பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினர் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை வலுப்படுத்துவதன் மூலம் 2 நாட்டினரும் கூட்டாக இணைந்து மீன் பிடிப்பதை உற்சாகப்படுத்தமுடியும்´ என தெரிவித்துள்ளார்.24 Hours

Comments

Popular posts from this blog

துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு